முகப்பு

கிறிஸ்துவுக்குள் அருமையான சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள். வேதாகமம் டாட் காம் தமிழில் வேதாகம கல்வி இணையதளத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கடவுளின் வார்த்தையைப் பற்றி சங்கீதக்காரனாகிய தாவீது சொல்வதை பாருங்கள்.

கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி முழுமையானதும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறவையுமாய் இருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாய் இருக்கிறது. கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாய் இருக்கின்றன. அவை பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கவையும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளவையுமாய் இருக்கின்றன. அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு.

சங்கீதம் 19:7-11

அப்போஸ்தலனாகிய பவுல் கடவுளுடைய வார்த்தையை பற்றி கொண்டிருக்கும் கருத்து…

வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.

2 தீமோத்தேயு 3:16-17

வேதாகமத்தை முறைப்படி கற்க வேண்டும் என்கிற உங்கள் விருப்பத்தை நினைத்து தேவனை துதிக்கிறோம். வேதாகமம் டாட் காம் என்கிற இந்த தளமானது வேதாகமத்தை ஆழமாக கற்க விரும்பும் விசுவாசிகளுக்கு உதவி செய்யும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் திருச்சபைக்கோ உங்கள் தனிப்பட்ட வேதாகம தியானத்திற்கோ இந்த தளம் மாற்றல்ல என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

வேதாகமம் டாட் காம்

கட்டுரைகள் பகுதியில் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கட்டுரைகள் பகுதிக்கு சென்று அவைகளை வாசிக்கலாம். நீங்கள் விரும்பும் தலைப்புகளையும் எங்களுக்கு தெரிவிக்கலாம். admin@vedhagamam.com என்கிற மின்னஞ்சலில் தெரிவியுங்கள். எங்களால் இயன்ற நல்ல பல தலைப்புகளில் கட்டுரைகளை அளிக்க முயல்கிறோம்.