அன்பு
இந்த வார்த்தைதான் இன்று மிகவும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட வார்த்தைகளில் பிரதானமான ஒன்று என சொன்னால் அது மிகையல்ல..
அன்பை போதிக்காத மார்க்கமே இல்லை, வேதம் போதிக்கும் அன்பு மற்ற எந்த மார்க்கத்தை காட்டிலும் மேலானதாகவும், அர்த்தம் பொருந்தியதாகவும் உள்ளது…
ஏனெனில் வேதத்தின் பிரகாரமான அன்பில் தீங்கில்லை, அநியாயத்தை சகிக்காது. ஆனால் உலகம் போதிக்கும் அன்பு அப்படியில்லை அது மனித கற்பனையினாலும், அனுபவத்தினாலும் உருவான ஒன்று…
ஆதியில் ஆதாம் சாப்பிடும்படி ஏவாளால் ஏவப்பட்ட போது அவன் மனது எப்படி சிந்திக்க வாய்ப்பிள்ளது??
இதை மறுத்தால், மனைவிக்கு விரோதமானவனாக மாறிவிடுவேன், அல்லது மனைவியை கஷ்டப்படுத்துவது போலாகலாம். சண்டை வரலாம் இப்படி இன்னும் பல… இந்த மாதிரியான சிந்தனை ஒருவரை காயப்படுத்திவிடக்கூடாது, சமாதானத்தை இழந்துவிடக்கூடாது, உறவில் விரிசலை ஏற்படுத்திவிடக்கூடாது என்ற அடிப்படையில் இயங்கக்கூடியது. இதைத்தான் பெரும்பாலான மக்கள், பின்பற்றுகிறார்கள். இதைத்தான் கிறிஸ்தவமாகவும் நினைக்கிறோம். ஆனால் வேதத்தின்படியான அன்பின் வாழ்க்கை வித்தியாசமானது.
இந்த அன்பின் வாழ்கை, தேவன் சொன்ன வசனத்தை காப்பாற்றவும் அதேவேளை, மனைவியின், அல்லது கணவன், மற்றும் நமக்கு நெருங்கியவர்களாக இருந்தால்கூட அவர்களின் வார்த்தையை அசட்டையும் செய்கிறது… அதனால் ஏற்படும் பின்விளைவுகளை எதிர் கொள்கிறது. தன்னால் ஏன் நெருங்கியவர்களின் வார்த்தையைகூட அசட்டை செய்ய நேரிட்டது என அன்பாக விளக்கும் தன்மையை கொண்டதுதான் இந்த வேதத்தின் அன்பு…
தேவனின் அன்பு என்னில் பிரவாகிப்பதன் காரணமே, நான் தேவனுடைய வார்த்தையை பின்பற்றவே அல்லாமல் நீர்த்துபொகச்செய்ய அல்ல…
தேவனின் அன்பில் மனிதனை பிரியப்படுத்தும் அம்சம் இல்லை, மனிதனை நேசித்து அவனால் ஏமற்றப்படும்போது, சோர்ந்துபோகும் நிலை இல்லை. மனிதர்களால் அவமதிக்கப்படும்போதும் அவர்களை விரோதிக்கும் தன்மை இல்லாதது.
எது எப்படியோ தேவனின் அன்பு என்னில் இருக்கும்போது தேவனுக்காக எதையும், எவரையும் விட்டுவிடும் மனப்பான்மையையே இந்த அன்பு எனக்குள் உருவாக்குகிறது….
ஆக ஏமாற்றமில்லை, சோர்வு இல்லை, அவமானம் இல்லை, விரோதம் இல்லை, மனிதனை சார்ந்து நம்பி இருக்கும் நிலைமை இல்லை. இதனால் கவலையும் இல்லை. வெளியே வாருங்கள், பெற்றொரை கனம்பண்ணுங்கள், தேவனுக்கு விரோதமான செய்கைகளை கடிந்துகொண்டு வெளியேறுங்கள், கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார், ஆமென்
