நான்சி லெய்க் டிமோஸ் என்பவர் தேவ சித்தத்திற்கு எதிர்த்து நிற்கிற பெருமையுள்ள, உடைக்கப்படாத நபர்களுக்கும், தேவனுடைய எழுப்புதலை அனுபவிக்கிற உடைக்கப்பட்ட தாழ்மையுள்ளவர்களுக்குமான சுபாவ வேறுபாட்டை விவரிக்கிறார். இவைகள் ஒவ்வொன்றையும் வாசித்து, உங்கள் சுபாவத்தை ஒப்பிட்டு அறிந்து, உடைக்கப்படாத வாழ்வின் சுபாவங்களை ஆண்டவரிடம் அறிக்கையிட்டு, ஆண்டவர் உங்களில் நொறுங்குண்ட தாழ்மையின் ஆவியைத் தரும்படி கேளுங்கள்.
எண். | பெருமையுள்ள கிறிஸ்தவர்கள் | உடைக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் |
1 | மற்றவர்களின் தவறுகளைப் பற்றியே சிந்திப்பவர்கள் | தங்கள் சொந்த ஆவிக்குரிய தேவையைக் குறித்த உணர்வுடையவர்கள் |
2 | சுய நீதியுள்ளவர்கள் – குற்றப்படுத்துகிற, குறை கண்டுபிடிக்கிற ஆவியை உடையவர்கள் (தங்கள் தவறுகளை மேலோட்டமானதாகவும், மற்றவர்களின் தவறுகளை மிக மோசமானதாகவும் கணிப்பவர்கள்) | மனதுருக்கமுடையவர்களாய், மன்னிக்கிறவர்களாய், மற்றவர்களிடத்தில் உள்ள நல்ல காரியங்களை காண்கிறவர்களாய் இருப்பவர்கள் |
3 | மற்றவரை கீழாக நினைப்பவர்கள் | தங்களைக் காட்டிலும் மற்றவரை மேலானவராக எண்ணுகிறவர்கள் |
4 | தனக்கு யாரும் தேவையில்லை என தன்னிச்சையாய் செயல்படுகிறவர்கள். | தங்கள் வாழ்வில் மற்றவர்களின் தேவையை உணர்ந்து, சார்ந்து கொள்கிற ஆவியை உடையவர்கள் |
5 | எல்லாம் தங்கள் இஷ்டப்படி, தங்கள் கட்டுப்பாட்டில் நடக்க வேண்டும் என விரும்புகிறவர்கள் | எல்லாம் தங்கள் கட்டுப்பாட்டில், தங்கள் இஷ்டப்படி நடக்க வேண்டும் என எதிர்பார்க்காதவர்கள் |
6 | தாங்கள் செய்தது சரி என்பதை நிரூபிக்க விரும்புகிறவர்கள் | சரியானதை எடுத்துச் சொல்லும்போது அதனை தர்க்கமில்லாமல் சரி என ஏற்பவர்கள் |
7 | தங்கள் உரிமையை நிலை நாட்ட விரும்புகிறவர்கள் | தங்கள் உரிமையை மனப்பூர்வமாய் விட்டுக்கொடுப்பவர்கள் |
8 | எல்லாவற்றிலும் அதிகமாய் எதிர்பார்க்கிறவர்கள் | எதையும் எதிர்பாராது கொடுக்கிறவர்கள் |
9 | மற்றவர் தங்களுக்கு ஊழியம்/ வேலை செய்ய வேண்டும் என விரும்புகிறவர்கள் | மற்றவர்களுக்கு ஊழியம்/வேலை செய்ய ஆர்வம் காட்டுகிறவர்கள் |
10 | தன் முன்னேற்றத்தையே விரும்புகிறவர்கள் | மற்றவரை முன்னிறுத்த விரும்புகிறவர்கள் |
11 | மற்றவரால் கவனிக்கப்படவும், பாராட்டப்படவும் வேண்டுமென செயல்படுகிறவர்கள் | தகுதியற்ற தங்களையும் இந்த ஊழியத்திற்கு ஆண்டவர் அழைத்திருக்கிறாரே என்ற உணர்வில் அகமகிழ்ந்து, மற்றவர்கள் கனப்படுத்தப்பட வேண்டுமென விரும்புகிறவர்கள் |
12 | தாங்கள் கண்டுகொள்ளப்படாமல், மற்றவர்கள் உயர்த்தப்படும்போது (பதவி உயர்வு பெறும்போது) வேதனைப்படுகிறவர்கள் | மற்றவர்கள் உயர்த்தப்படும்போது மகிழ்ச்சியடைகிறவர்கள் |
13 | என்னால் இந்த ஊழியம் சிறப்பாய் நடக்கிறது என எண்ணுபவர்கள் | இந்த ஊழியத்தை செய்யும்படி நான் தகுதியற்றவன் என்பதை உணர்ந்திருப்பவர்கள் |
14 | நான் ஆண்டவருக்கு என்ன செய்யலாம் என எண்ணுபவர்கள் | ஆண்டவர் செய்ததற்கு ஈடாக கொடுக்கும் அளவிற்கு தங்களில் ஒன்றுமில்லை என்பதை அறிந்திருப்பவர்கள் |
15 | தாங்கள் பெற்றிருக்கிற வேத அறிவைக்குறித்து மேன்மையாய் எண்ணுகிறவர்கள் | தாங்கள் இன்னும் எவ்வளவாய் கற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது என்பதை அறிந்திருப்பவர்கள் |
16 | சுயத்தைப் (தன்னைப்) பற்றியே சிந்தையாயிருப்பவர்கள் | சுயத்தைப் (தன்னைப்) பற்றிய சிந்தையில்லாதவர்கள் |
17 | ஜனங்களை தங்களை விட்டு தூரமாகவே வைத்திருப்பவர்கள் | மற்றவரிடம் நெருங்கி பழகுவதால், அன்பான உறவுள்ளவராயிருப்பதால் உள்ள ஆபத்தான சவாலை ஏற்றிருப்பவர்கள் |
18 | மற்றவரை துரிதமாய் குற்றப்படுத்திப் பேசுகிறவர்கள் | தனிப்பட்ட முறையில் தவறுகளுக்கு பொறுப்பேற்பவர்கள் |
19 | தங்களை இலகுவாக நெருங்கவோ, சந்திக்கவோ, பழகவோ மற்றவர்களை அனுமதிக்காதவர்கள் | மற்றவர்கள் எப்பொழுதும் தங்களை சந்திக்க, நட்புறவு கொள்ள விருப்பமுள்ளவர்களாய் இருக்கிறவர்கள் |
20 | தங்களின் தவறு சுட்டிக்காட்டப்படும்போது, அதனை நியாயப்படுத்த முயற்சிப்பவர்கள் | தங்கள் தவறு சுட்டிக்காண்பிக்கப்படும்போது அதனை தாழ்மையோடு, திறந்த இருதயத்தோடு ஏற்றுக்கொள்கிறவர்கள் |
21 | தாங்கள் எப்பொழுதும் ‘மதிக்கப்பட வேண்டும்’ என விரும்புகிறவர்கள் | “உண்மைத் தன்மை”யோடு இருக்க விரும்புகிறவர்கள் |
22 | மற்றவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதில் கவனம் செலுத்துகிறவர்கள் | ஆண்டவர் தங்களைப் பற்றி அறிந்திருக்கிறதைக் குறித்தே அக்கறையுள்ளவர்கள் |
23 | தங்களைப்பற்றிய பிம்பம் கலையாமல் பாதுகாக்க விரும்புகிறவர்கள் | தங்களின் பெயர் பிரஸ்தாபத்திற்கு (பிம்பத்தை உருவாக்குகிற காரியத்திற்கு) மரித்தவர்கள் |
24 | தங்கள் ஆவிக்குரிய தேவையைக் குறித்து மற்றவரிடம் பகிர்ந்துகொள்ள விரும்பாதவர்கள் | மற்றவரிடம் வெளிப்படையாக, ஒளிவு மறைவின்றி நடந்துகொள்கிறவர்கள் |
25 | தங்கள் பாவத்தைக் குறித்து எவரும் அறிந்துகொள்ளக்கூடாது என விரும்புகிறவர்கள் | யாரும் தங்களைப் பற்றி அறிவதைக்குறித்து கவலையில்லாதவர்கள் (உடைக்கப்பட்ட நிலையில் மற்றவர் தங்களைப் பற்றி அறிவதால் ஒன்றும் இழப்பில்லை என்ற நிலையில் உள்ளவர்கள்) |
26 | “நான் தவறு செய்துவிட்டேன், என்னை தயவு செய்து மன்னித்து விடுவாயா?” எனக் கேட்க விரும்பாதவர்கள் | தங்களை தவறுகளை உடனடியாக ஒத்துக்கொண்டு, மன்னிப்பை நாடுபவர்கள் |
27 | தங்கள் பாவங்களை அறிக்கையிடும்போது, பொதுப்படையாய் அறிக்கையிடுபவர்கள் | பாவத்தை அறிக்கையிடும்போது கருத்துள்ளவர்களாய், குறிப்பாய் செய்கிறவர்கள் |
28 | பாவத்தின் விளைவுகளைப்பற்றி மட்டுமே சிந்திப்பவர்கள் | பாவத்தின் வேர்/ காரணியை எண்ணி துக்கப்படுகிறவர்கள் |
29 | தங்கள் பாவத்தை மற்றவரால் கண்டறியப்படும்போது மாத்திரம் அதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறவர்கள் | பாவத்தைக் குறித்து மனஸ்தாபப்பட்டு, மனந்திரும்பி, அதனை விட்டுவிடுகிறவர்கள் |
30 | ஒருவர்மேல் மனஸ்தாபமோ, தவறான புரிந்துகொள்ளலோ இருந்தால், அவர்/அவள் வந்து என்னிடம் மன்னிப்பு கேட்கட்டும் என காத்திருப்பவர்கள் | மற்றவரோடு ஒப்புரவாகும்படி முதன்மையாய் செயலாற்றுகிறவர்கள்; சிலுவைக்கு முதலாவது செல்ல விருப்பமுள்ளவர்கள் |
31 | மற்றவரோடு தங்களை ஒப்பிட்டுப்பார்த்து, தானே கனத்திற்கு உரியவர் என எண்ணுகிறவர்கள் | தேவனுடைய பரிசுத்தத்தோடு தங்களை ஒப்பிட்டுப்பார்த்து, தேவ இரக்கத்தின் தேவையை உணர்ந்திருப்பவர்கள் |
32 | தாங்கள் எந்தக் காரியத்திலிருந்தும் மனந்திரும்ப வேண்டிய அவசியமில்லை என எண்ணுகிறவர்கள் | மனந்திரும்புதலின் இருதயத்தோடு தொடர்ந்து இருக்கிறவர்கள் |
33 | தங்களுக்கு தனிப்பட்ட உயிர்மீட்சி அவசியமில்லை எனவும், மற்றவர் அனைவருக்கும் அது தேவை என எண்ணுகிறவர்கள் | பரிசுத்த ஆவியானவரின் தொடர்ச்சியான நிறைவின் அவசியத்தை (உயிர்மீட்சியின் தேவையை) எப்பொழுதும் உணர்கிறவர்கள் |
