கடவுளின் வார்த்தையை நம்பின ஆபேல், அதையே பின்பற்றி பழுதற்ற சுத்தமான ஒரு மிருகத்தின் இரத்தத்தை சிந்தி இறைவனிடத்தில் சேர்ந்தார். கடவுளை அது பிரியப்படுத்தியது. அதை கடவுள் அங்கிகரித்தார். காயீனோ கடவுளின் வார்த்தையை நம்பாமல், தன் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் கடவுளை அணுக முயற்சித்தார். கடவுளை அது பிரியப்படுத்தவில்லை. கடவுள் அதை நிராகரித்தார்.