Rs. 500 க்குள் அமேசானில் வாங்க முடிந்த அற்புதமான தமிழ் பைபிள்கள்

Rs. 500 க்குள் அமேசானில் வாங்க முடிந்த அற்புதமான தமிழ் பைபிள்கள்

பரிசுத்த வேதாகமம் மனிதர்கள் விரும்பி படிக்கும் புத்தகங்களில் ஒன்றாக எப்போதும் இருந்துவருகிறது. பரிசுத்த வேதாகமம் பற்றிய சில தகவல்கள் நம்மை ஆச்சரியப்படுத்தக் கூடும்.

பழைய ஏற்பாடு 39 புத்தகங்கள் புதிய ஏற்பாடு 27 புத்தகங்கள் என மொத்தம் 66 புத்தகங்களின் தொகுப்பே பரிசுத்த வேதாகமம்.

வேதாகமம் பெரும்பாலும் பழைய ஏற்பாடு எபிரேய மொழியிலும் புதிய ஏற்பாடு கிரேக்க மொழியிலும் எழுதப்பட்டது.

வேதாகமம் முழுமையாக 532 மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது.

வேதாகமத்தின் பகுதிகள் 2883 மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது.

உலகம் முழுவது ஒவ்வொரு வருடமும் 10 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் வேதாகமம் விற்பனையாகிறது.

அமேசான் உடைய kindle வாசிப்பு தளத்தில் வேதாகமம் அதிகம் விரும்பப்படும் புத்தகமாக எப்போதும் இருந்துவருகிறது.

இப்படிப்பட்ட அற்புதமான ஒரு புத்தகம் நம் தமிழ் மொழியிலும் வாசிக்கக் கிடைப்பது எத்தனை பாக்கியம்.

அமேசான் இணையதளத்தில் 500 ரூபாய்க்கு கீழே வாங்க முடிந்த 10 வேதாகமங்கள் இங்கே பட்டியலிடப் பட்டிருக்கிறது. இந்த இணைப்புகளை சொடுக்குவதன் மூலம் அந்த வேதாகமத்தை நீங்கள் வாங்க முடியும்.

இவைகளை வாங்கும் முன் நாம் அறிந்துகொள்ள வேண்டிய உண்மை என்னவெனில் வேதாகமத்தில் இருக்கும் வார்த்தைகள் விலையேறப்பெற்றது. இதில் கொடுக்கப்பட்டிருக்கும் விலை அந்த வார்த்தையை அச்சிட பயன்படுத்தப்பட்ட பொருட்களுக்குத்தான். வசனங்ககளுக்கு அல்ல.

குறிப்பு – இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் விலைகள் இந்த கட்டுரை எழுதப்பட்ட அன்று உள்ள விலை. விலை மாறுபாடுக்கு உட்பட்டது. சில வேதாகமங்களுக்கு தபால் செலவு தனியாக இருக்கலாம். வாங்கும்போது கவனித்து வாங்கவும். All links are affiliated links.

பரிசுத்த வேதாகமம் – kindle version – விலை Rs.69

முதலாவது நமது வரிசையில் வருவது kindle உபகரணத்தில் அல்லது kindle புத்தக வாசிப்பு மென்பொருள் மட்டுமே பயன்படுத்தி வாசிக்க முடிந்த வேதாகமம். விலை 69 ரூபாய். இது ஒரு மின் புத்தக வடிவிலான வேதாகமம். அச்சடிக்கப்பட்ட வேதாகமம் அல்ல.

தமிழ் வேதாகமம் சிறியது – விலை Rs.249

அடுத்ததாக அமேசானில் கிடைக்கும் வேதாகமம் விலை 249 ரூபாய்க்கு கிடைக்கிறது. கருப்பு வண்ணத்தில் தாள் அட்டைகளுள்ள வேதாகமம். மிக அடிப்படையான வேதாகமம். தாளின் தரமும் சொல்லிக்கொள்ளும்படி இருக்காது என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

Click this link to buy this Bible

https://amzn.to/3m9BNpV

தமிழ் இளையோர் விவிலியம் – விலை Rs. 250

தமிழில் நாம் பொதுவாக பயன்படுத்தும் வேதாகமத்துக்கு அப்பாற்பட்டு சிறப்பு வேதாகம வடிவங்களை பார்ப்பது அரிது. ஆங்கிலத்தில் சிறுவர்களுக்கென்று அவர்கள் வயதுக்கு ஏற்றபடி வேதாகம சம்பங்களை அழகான படங்களோடு சுருக்கமாக வெளியிடுவார்கள். வேதாகம மாந்தர்களையும் சம்பவங்களையும் அவர்களுக்கு சிறு வயதிலேயே அறிமுகப்படுத்த சிறந்த வாய்ப்பாக அது அமையும். வாசிப்பையும் ஊக்கப்படுத்தும். தமிழில் சிறுவர்களுக்கென்று அரிதாக இருக்கும் சிறுவர் வேதாகமத்தில் இதுவும் ஒன்று. வாசிக்கப்பழக்கும் சிறுவர்களுக்கு ஏற்ற ஒன்று. நான் சிறுவனாக இருந்தபோது என்னிடத்தில் இது இருந்தது. தாள் பதிப்பு தரமும் சிறப்பாக இருக்கும். விலை 250 ரூபாய். கண்டிப்பாக உங்கள் பிள்ளைக்கு வாங்கிக் கொடுங்கள்.

Click this link to buy this Bible

https://amzn.to/3fXoYN4

தமிழ் வேதாகமம் புத்தக வடிவம் – விலை Rs . 280

வழக்கமாக வேதாகமம் என்றாலே நமக்கு ஒரு குறிப்பிட்ட வடிவம் நியாபகத்துக்கு வரும். ஆனால் இந்த வேதாகமம் அந்த வடிவத்தில் இருக்காது. தரமான கருப்பு தாள் அட்டையுடன் புத்தகம் போல தோற்றமளிப்பதே இந்த வேதாகமத்தின் சிறப்பம்சம். வெளிப்புறத்தில் சிவப்பு நிறம் இருக்காது. கைக்கடக்கமான இந்த வேதாகமம் இந்திய வேதாகம சங்கத்தின் வெளியீடு. விலை 280 ரூபாய்.

Click this link to buy this Bible

https://amzn.to/3l7OkJ5

தமிழ் வேதாகமம் பிளாஸ்டிக் அட்டை – விலை Rs. 299

வழக்கமாக கருப்பு நிற பிளாஸ்டிக் அட்டையுடன் வரும் அடிப்படை வேதாகமம். பிளாஸ்டிக் அட்டையானது நான்கு வளையும் தன்மையுடன் இருக்கும். எனவே கவனமாக பயன்படுத்தினால் வெகு காலத்துக்கு பயன்படுத்த முடியும். விலை 299 ரூபாய்.

Click this link to buy this Bible

https://amzn.to/3mbf1Oj

தமிழ் வேதாகமம் வெல்வெட் அட்டையுடன் – விலை Rs. 399

நாம் வழக்கமாக பயன்படுத்தும் வேதாகம அளவுதான். ஆனால் வெல்வெட் அட்டையுடன் வருகிறது. இந்த இணைப்பில் படத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதே வடிவத்துடன் அட்டை இருக்கும். விலை 399 ரூபாய்.

Click this link to buy this Bible

https://amzn.to/39gpFzF

தமிழ் வேதாகமம் வெல்வெட் அட்டையுடன் – விலை Rs. 399 (BSI)

இந்த வேதாகமமும் முன்னர் குறிப்பிடப்பட்டுள்ள அதே விதமான வேதாகமம் தான். ஆனால் வெல்வெட் அட்டை படம் வேறு. முந்தைய வடிவத்தை விட இந்த வடிவம் நன்றாக இருக்கிறது என நீங்கள் நினைத்தால் இதை வாங்கலாம். இந்திய வேதாகம கழகத்தின் வெளியீடு. விலை 399 ரூபாய்.

Click this link to buy this Bible

https://amzn.to/3maJ5K5

தமிழ் வேதாகமம் சிறப்பு வெல்வெட் அட்டையுடன் – விலை Rs. 440

இதுவும் வெல்வெட் அட்டையுடன் வரும் வேதாகமம் தான். மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு வெல்வெட் விட தரமானது என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் படத்தை பார்த்தால் அப்படி தெரியவில்லை. ஆனால் வேறு சில அட்டைப்பட வடிவங்கள் வைத்திருக்கிறார்கள். நமக்கு விரும்பிய அட்டைப்பட வடிவத்தை தெரிந்தெடுக்க தக்க விதத்தில் அமேசான் இணையத்தில் வைக்கக்கூடிய வாய்ப்பு இருந்தும் விற்பனையாளர் அந்த வாய்ப்பை வழங்கக்கவில்லை என்பது வருத்தத்திற்குறியது.

Click this link to buy this Bible

https://amzn.to/2Jd6wUy

தமிழ் வேதாகமம் புத்தக சுட்டியுடன்- விலை Rs. 500

நாம் இதுவரை பார்த்த வேதாகமங்கள் அனைத்தும் புத்தக சுட்டி இல்லாதது. 500 ரூபாய்க்கு உட்பட்ட வேதாகமத்தில் இந்த ஒரு வேதாகமம் மட்டுமே புத்தக சுட்டியுடன் வருகிறது. புத்தக இருப்பிடத்தை கண்டுபிடிக்க சிலருக்கு வசதியாக இருக்கலாம். அட்டையும் தரமானதாக இருக்கிறது. விலை 500 ரூபாய்.

Click this link to buy this Bible

https://amzn.to/2V48Uj9

தமிழ் வேதாகம ஒத்த வாக்கியம்- விலை Rs. 500

ஒருவேளை உங்களிடத்தில் தமிழ் வேதாகமங்கள் ஏராளம் இருக்கலாம். ஒரு தமிழ் வேதாகம ஒத்த வாக்கியம் உங்களிடத்தில் இருக்கிறதா? ஒரே கருத்தை உடைய வசனங்கள் எங்கெங்கல்லாம் இருக்கிறது என ஒத்த வாக்கியத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். வேதாகமத்தை ஆழமாக கற்பதற்கு உதவும் அற்புதமான ஒரு வேதாகம அடிப்படை புத்தகம். வேதாகம சத்தியத்தை ஆழமாக அறிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக வைத்திருக்கவேண்டிய புத்தகம். கண்டிப்பாக வாங்கி பயன்படுத்துங்கள். விலை 500 ரூபாய்.

Click this link to buy this Bible

https://amzn.to/2Jd8J2i

இம்மானுவேல் ஜெஸ்வின்

போதகர், கிருபை வேதாகம திருச்சபை

திருநெல்வேலி

Leave a Reply