கிறிஸ்தவன் என்றால் என்ன?

கிறிஸ்தவன் என்றால் என்ன?

“என்னுடைய நாட்டைப் பொறுத்தவரை கிறிஸ்தவர்கள் என்றால் வாரத்திற்கு ஒரு முறை சர்ச்சுக்குப் போய்விட்டு வருவார்கள், அவ்வளவுதான்” என்கிறார் ஓர் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த கிங்ஸ்லி. “உடை உடுத்துவதிலும் பண்டிகைக் கொண்டாட்டங்களிலும் பெண்களை நடத்துகிற விதத்திலும் மேலை நாட்டுக் கலாச்சாரங்களையும் பாரம்பரியங்களையும் பின்பற்றுகிற ஒரு தொகுதியினராகவே எங்களுடைய சமுதாயத்தில் கிறிஸ்தவர்கள் கருதப்படுகிறார்கள்” என்று மத்திய கிழக்கைச் சேர்ந்த ராட் என்பவர் கூறுகிறார்.

ஆனால், ஒருவர் வெறுமனே வாரத்திற்கு ஒருமுறை சர்ச்சுக்குப் போய்விட்டு வந்தாலோ குறிப்பிட்ட சடங்காச்சாரங்களையும் பாரம்பரியங்களையும் பின்பற்றினாலோ அவரை ஒரு கிறிஸ்தவர் என்று சொல்லிவிட முடியுமா? 

எதார்த்தத்தில், யாரைத்தான் “கிறிஸ்தவர்” என்று அழைக்க முடியும்? கிறிஸ்துவின் போதனைகளை மட்டுமல்லாமல் அவருடைய மனப்பான்மை, மதிப்பீடுகள், நடந்துகொண்ட விதம் ஆகியவற்றையெல்லாம் தன் வாழ்க்கையில் பிரதிபலிக்கிற ஒருவரைத்தானே கிறிஸ்தவர் என்று அழைக்க முடியும்?* ஆரம்பகால கிறிஸ்தவர்கள் எவ்வாறு நடந்துகொண்டார்கள்?

ஆரம்பகால கிறிஸ்தவம்​ – ஒரு வாழ்க்கை முறை :

இயேசு தம் சீஷர்களிடம், “நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்” என்றார். (யோவான் 15:14) 

இயேசுவின் போதனைகள் வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் பாதித்ததால் அவருடைய சீஷர்கள் ஆரம்பத்தில் தங்கள் மதத்தை ‘இந்த மார்க்கம்’ என்று அழைத்தார்கள். (அப்போஸ்தலர் 9:2) ஆனால், சீக்கிரத்தில், ‘[“கடவுளால்,” NW] அவர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கப்படலாயிற்று.’ (அப்போஸ்தலர் 11:26) அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட இந்தப் புதிய பெயர், தம் பரலோக தகப்பனின் சித்தத்தை மனிதகுலத்துக்கு வெளிப்படுத்திய இயேசுவைக் கடவுளின் மகனாக அவர்கள் நம்புவதை அர்த்தப்படுத்தியது. இந்த நம்பிக்கை அவர்களைச் சுற்றியிருந்தவர்களிலிருந்து வேறுபட்ட வாழ்க்கை முறையைப் பின்பற்ற அவர்களைத் தூண்டியது.

கிறிஸ்துவைப் பின்பற்றினவர்கள் பைபிள் கற்பிக்கிற விஷயங்களைப் பின்பற்றும்படி கிறிஸ்துவின் போதனைகள் உந்துவித்தன. 

அதாவது, “விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், . . . வெறிகள், களியாட்டுகள் முதலான” காரியங்களிலிருந்து விலகியிருப்பதை அது அர்த்தப்படுத்தியது. (கலாத்தியர் 5:19-21; எபேசியர் 4:17-24) கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களில் சிலர் ஒருகாலத்தில் இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபட்டிருந்ததை அப்போஸ்தலன் பவுல் அவர்களுக்கு நினைப்பூட்டினார். பிறகு அவர் இவ்வாறு சொன்னார்: “ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.”​ (1 கொரிந்தியர் 6:9-11).

இ. டபிள்யூ. பார்ன்ஸ் கிறிஸ்தவத்தின் எழுச்சி என்ற தன்னுடைய ஆங்கில புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: 

“கிறிஸ்தவ அமைப்பின் உறுப்பினர்கள் முக்கியமாக, ஒழுக்க சீலர்களாகவும் சட்டத்தை மதிக்கிறவர்களாகவும் இருந்தார்களென கிறிஸ்தவ அமைப்பின் ஆரம்பகால அதிகாரப்பூர்வ ஆவணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் நல்ல குடிமக்களாகவும் உண்மையான பிரஜைகளாகவும் இருக்க விரும்பினார்கள். பொய் மதத்தின் தவறுகளையும் தீய செயல்களையும் வெறுத்து ஒதுக்கினார்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் சமாதானம் விரும்புகிற அயலகத்தார்களாகவும் நம்பகமான நண்பர்களாகவும் இருக்க முயற்சி செய்தார்கள். 

“கிறிஸ்தவ அமைப்பின் உறுப்பினர்கள் முக்கியமாக, ஒழுக்க சீலர்களாகவும் சட்டத்தை மதிக்கிறவர்களாகவும் இருந்தார்களென கிறிஸ்தவ அமைப்பின் ஆரம்பகால அதிகாரப்பூர்வ ஆவணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் நல்ல குடிமக்களாகவும் உண்மையான பிரஜைகளாகவும் இருக்க விரும்பினார்கள். பொய் மதத்தின் தவறுகளையும் தீய செயல்களையும் வெறுத்து ஒதுக்கினார்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் சமாதானம் விரும்புகிற அயலகத்தார்களாகவும் நம்பகமான நண்பர்களாகவும் இருக்க முயற்சி செய்தார்கள். 

தன்னடக்கம் உள்ளவர்களாகவும், கடுமையாக உழைப்பவர்களாகவும் எல்லா விதத்திலும் சுத்தமானவர்களாகவும் இருக்கும்படி கற்பிக்கப்பட்டார்கள். ஊழல்களும், ஒழுக்கங்கெட்ட காரியங்களும் நடந்த காலத்திலும் தங்களுடைய கொள்கைகளுக்கு இசைய வாழ்ந்தவர்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்துகொண்டார்கள். அவர்களுக்கென உயர்ந்த ஒழுக்கத் தராதரங்கள் இருந்தன: திருமண பந்தத்தை மதித்தார்கள், குடும்ப வாழ்க்கையில் ஒழுக்க சுத்தத்தைக் காத்துக்கொண்டார்கள்.” ஆரம்பகால கிறிஸ்தவர்களின் வாழ்க்கை இப்படித்தான் இருந்தது.

ஆரம்பகால கிறிஸ்தவத்தின் இன்னொரு முக்கியமான அடையாளம், 

அதன் உறுப்பினர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதில் மும்முரமாக ஈடுபட்டார்கள். கிறிஸ்து தம்மைப் பின்பற்றினவர்களிடம், ‘நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்’ என்று கட்டளையிட்டார். (மத்தேயு 28:19, 20) பிரான்சிலுள்ள பாரிஸ் நகரில் சுஸோர்போன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸான் பெர்னார்டி என்ற பேராசிரியர் இவ்வாறு கூறினார்: “எல்லா இடங்களுக்கும் சென்று எல்லாரிடமும் பிரசங்கிக்கும்படி [கிறிஸ்தவர்களிடம்] எதிர்பார்க்கப்பட்டது. 

நெடுஞ்சாலைகளிலும் பட்டணங்களிலும் பொது இடங்களிலும் வீடுகளிலும் அவர்கள் பிரசங்கிக்க வேண்டும். மக்கள் அவர்களுக்குச் செவிகொடுத்தாலும்சரி, செவிகொடுக்காவிட்டாலும்சரி அவர்கள் பிரசங்கிக்க வேண்டும். ஏழைகளுக்கும் சொத்துக்களைக் குவித்துவைத்திருந்த செல்வச்சீமான்களுக்கும் அவர்கள் பிரசங்கிக்க வேண்டும். சாலை மார்க்கமாகவும் கடல் மார்க்கமாகவும் உலகத்தின் கடைக்கோடிகளுக்குச் சென்று அவர்கள் பிரசங்கிக்க வேண்டும்.”

இப்படி சில ஆரம்பகால சாட்சியங்கள் உண்டு.

Leave a Reply