பரலோகத்தில் ஒரு உரையாடல்

பரலோகத்தில் ஒரு உரையாடல்

தசம பாக போதகர் நியாயத்தீர்ப்பு நீதிமன்றம் முன்பு (பெயர்கள்/கதைகள் கற்பனைக்கு) ஒரு சீசனை ஆண்டவர் நீதிபதியாக உட்காரவைத்து இருக்கிறார். இவர் வேலை என்னவெனில் நியாயத்தீர்ப்புக்கு வருகிறவரை கேள்விகேட்டு அவர் செய்த தவறை உணர்த்தி உள்ளே இறுதி தீர்ப்புக்கு அனுப்புவது ! Ok.கற்பனை பண்ணி வாசியுங்கள்

நீதிபதி: திரு .ஜோன்ஸ், உங்கள் மேல் பணம் அபகரித்தல் என்ற முறையில் குற்றச்சாட்டுகள் உள்ளன. கடந்த 20 வருடங்களாக ஆயிரக்கணக்கான பேரிடம் பணம் கொள்ளை அடித்து இருக்கிறீர்கள். நீங்கள் பயமுறுத்தி, சூழ்ச்சியாய் பேசி, 10% தசம பாகம் கொடுத்தால்தான் , கடவுள் ஆசீர்வதிப்பார் என்று சொல்லி இருக்கிறீர்கள். மட்டுமல்ல, அவர்கள் தசமபாகம் கொடுக்காவிட்டால், கடவுள் அவர்களை சபிப்பார் என்றும் சொல்லியிருக்கிறீர்கள். இதை குறித்து நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?

ஜோன்ஸ்: நான் குற்றவாளி அல்ல, மை லார்ட். நான் தவறு செய்யவில்லை. பைபிள் சொன்னதையே நான் சொன்னேன். வேதத்தில் ஆபிரஹாம் , மெல்கிசேதேக்கிற்கு தசம பாகம் கொடுத்தார், அதனால் கடவுள் அவரை ஆசீர்வதித்தார். ஆபிரஹாம் பொன்னும், வெள்ளியும் உள்ளவராய், செல்வந்தனாக வாழ்ந்தார்.

நீதிபதி: ஆதியாகமத்தில் அதிகாரம் 13:2 இல் ஆபிரஹாம் ஆடு, மாடுகளோடும், பொன்னும், வெள்ளியோடும் செல்வந்தராய் இருந்தார் என்று சொல்லப்படவில்லையா?

ஜோன்ஸ்: ஆமாம். நீங்கள் சொல்வது சரி . இதைத்தான் நானும் சொன்னேன்.

நீதிபதி: ஆதியாகமம் 14 ஆம் அதிகாரத்தில் தான் ஆபிரஹாம், மெல்கிசேதேக்கிற்கு தசமபாகம் கொடுக்கிறார் என்று வாசிக்கிறோம். ஆனால் ஆதியாகமம் 13இல் வாசிக்கும் போதே, ஆபிரஹாம் செல்வந்தராக வாழ்ந்தார் என்று பார்க்கிறோமே ! எனவே ஆபிரஹாம் மெல்கிசேதேக்கிற்கு தசம பாகம் கொடுக்கும் முன்னரே பணக்காரராக இருந்தார் என்பதுதானே உண்மை?

ஜோன்ஸ்: ஆம், நீங்கள் சொல்வது உண்மை.

நீதிபதி: அப்படியானால், ஆபிரகாமின் செல்வம் தசமபாகம் கொடுத்ததால் வந்தது என்பது பொய்தானே?

ஜோன்ஸ்: ம்ம்ம்ம்…

நீதிபதி: ஆபிரஹாம் உண்மையாய் கொடுத்ததால் தான் கடவுள் அவரை ஆசீர்வதித்தார் என்று சொல்லுகிறீர்கள். எத்தனை முறை ஆபிரஹாம் மெல்கிசேதேக்கிற்கு தசம பாகம் கொடுத்தார்?

ஜோன்ஸ்: ஹ்ம்ம், ஒரே ஒரு முறை.

நீதிபதி: அப்படியானால் அவர் மாதா மாதம் கொடுத்தார் என்று பைபிள் சொல்ல வில்லையே?

ஜோன்ஸ்: ஆம், அப்படி சொல்ல வில்லை.

நீதிபதி: மெல்கிசேதேக்கிற்கு கொடுக்க ஆபிரகாமிற்கு எங்கிருந்து பொருட்கள் கிடைத்தன?

ஜோன்ஸ்: போரிலே கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள்.

நீதிபதி: அப்படியானால், அவர் தசமபாகம் கொடுத்தது தனக்கு சொந்தமானதில் இருந்து அல்ல..

ஜோன்ஸ்: ஆம், அப்படிதான் தெரிகிறது.

நீதிபதி : ஆபிரஹாம் தனக்கு சொந்தமான பொருட்களில் இருந்து மெல்கிசேதேக்கிற்கு கொடுத்தார் என்று பைபிளில் இருக்கிறதா?

ஜோன்ஸ் : இல்லை.

நீதிபதி: எனவே கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் என்றால், அது உணவு, ஆடு, மாடு போன்ற பல பொருட்கள்தானே? கொள்ளையடிக்கப்பட்டது பணம் என்று சொல்லப்படவில்லையே?

ஜோன்ஸ்: ஆம், அது பணம் என்று குறிப்பிடப்படவில்லை.

நீதிபதி: எனவே ஆபிரஹாம் மெல்கிசேதேக்கிற்கு பணம் கொடுத்தார் என்ற நிகழ்வே இல்லை, அப்படித்தானே?

ஜோன்ஸ்: ஆம்.

நீதிபதி: கடைசி கேள்வி, மெல்கிசேதேக்கிற்கு கொள்ளை பொருள்களில் இருந்து பணம் கொடுக்க வேண்டும் என்று கடவுள் ஆபிரஹாமிடம் சொன்னாரா?

ஜோன்ஸ்: இல்லை.

நீதிபதி: ஒரே ஒரு முறை, தானாக முன்வந்து ஆபிரஹாம் கொடுத்த இந்த பரிசை போல், எல்லா கிறிஸ்த்தவர்களும் 10% பணத்தை தங்கள் சபைகளுக்கு கொடுக்க வேண்டுமா?

எல்லா சான்றுகளையும் வைத்து பார்க்கும் போது, வேதம் சொல்லாததை சொன்னதாக நீங்கள் சொன்னது, குற்றம் என்பது நிரூபணம் ஆகிறது.

ஜோன்ஸ்: மை லார்ட், நான் மெல்கிசேதேக்கை வைத்து தசம பாகம் வாங்கியதை தவறு என்று ஒத்து கொள்கிறேன். ஆனால் பல வசனங்கள் தசம பாகம் வாங்குவதை சரி என்று சொல்லியிருக்கிறது. யாக்கோபு தான் 10% கடவுளுக்கு கொடுப்பேன் என்று சொன்னதை வாசிக்கிறோம். எனவே நாம் தசம பாகம் கொடுக்க வேண்டும்.

நீதிபதி: நீங்கள் சொல்லும் வசனத்தை வாசியுங்கள்.

ஜோன்ஸ்: ஆதியாகமம் 28இல், அப்பொழுது யாக்கோபு: தேவன் என்னோடே இருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்து,

என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திரும்பிவரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்;

நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனை பண்ணிக்கொண்டான்.

நீதிபதி: நாமும் யாக்கோபின் முன் மாதிரியை பின் பற்ற வேண்டும் என்று சொல்லுகிறீர்களா?

ஜோன்ஸ்: ஆம், நாமும் 10% கொடுக்க வேண்டும்.

நீதிபதி: நான் ஒரு விஷயத்தை உங்களுக்கு கோடிட்டு காட்ட விரும்புகிறேன். யாக்கோபு சொன்னது என்ன? கடவுள் என்னை ஆசீர்வதித்தால், அவர் ஆசீர்வாதத்தில் 10% கொடுப்பேன். அப்படியானால் கடவுள் நம்மை ஆசீர்வதித்தால் , நாம் யாக்கோபை பின்பற்றி 10% கொடுக்க வேண்டும் , சரிதானே?

ஜோன்ஸ்: இல்லை, நான் அப்படி சொல்ல வில்லை.

நீதிபதி: இல்லையா? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

ஜோன்ஸ்: நாமும் 10% கொடுக்க வேண்டும்.

நீதிபதி: மீண்டும் நீங்கள் உங்கள் வசதிக்காக வசனத்தை தவறாக திரித்து சொல்கிறீர்கள். யாக்கோபு எப்படி தன்னுடைய ஆணையை நிறைவேற்றினார் என்று வசனத்தில் இருந்து சொல்ல வேண்டும். அவர் எப்படி 10% காணிக்கையை எங்கு செலுத்தினார்? ஏனென்றால் ஆலயமோ அல்லது லேவியரோ அப்போது இல்லையே!

ஜோன்ஸ்: அவர் எங்கு தன் ஆணையை நிறைவேற்றினார் அல்லது தசம பாகம் செலுத்தினாரா என்று வேதம் எங்கும் சொல்லவில்லை.

நீதிபதி: யாக்கோபு தன்னிச்சையாக, நிபந்தனைக்கு உட்பட்ட ஆணையை கடவுளிடம் இட்டார். இதை ஒரு கட்டளையாக மாற்றி மக்கள் இப்படி செய்ய வேண்டும் என்று பேச முடியாது.

ஜோன்ஸ் : சரி மை லார்ட், நான் வேறு சில வேத வசனங்களை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்

நீதிபதி: இது வரை நீங்கள் சொன்ன எல்லாமே எனக்கு ஏற்புடையதாக இல்லை. நீங்கள் வசனங்களை தவறாக மேற்கோள் காட்டி, ஜனங்களை உங்கள் பண ஆசைக்கு இரையாக்கி விட்டீர்கள். ஆனாலும், நீங்கள் இன்னும் சில ஆதாரங்கள் இருந்தால், அவைகளை காண்பிக்க அனுமதி கொடுக்கிறேன்.

ஜோன்ஸ்: மல்கியா புத்தகம் 3 ஆம் அதிகாரத்தில், மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள். தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே.

9. நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; ஜனத்தாராகிய நீங்கள் எல்லாரும் என்னை வஞ்சித்தீர்கள்.

10. என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

மை லார்ட், இந்த வசனத்தின்படி நாம் தசம பாகம் கொடுத்து தானே ஆக வேண்டும். அல்லது கடவுள் நம்மை சபித்து விடுவார்.

நீதிபதி: கடவுள் நம்முடைய பணத்தில் இருந்து தசமபாகம் கொடுக்க சொல்லவே இல்லையே? அதை பற்றி உங்களுக்கு தெரியுமா ?

ஜோன்ஸ்: இல்லை எனக்கு தெரியாது.

நீதிபதி: இந்த வசனத்தில் சொல்லப்பட்ட தசமபாகம் சாப்பிடும் பொருட்கள் பற்றியதேயன்றி, பணத்தை பற்றி அல்ல.

ஜோன்ஸ்: மை லார்ட் , அந்த காலத்தில் பணம் இல்லை, அதனால் அவர்கள் உணவு பொருட்களை தசம பாகம் கொடுத்தனர்.

நீதிபதி: நீங்கள் சொல்வது உண்மை இல்லை. பணத்தை குறித்து ஆதியாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மல்கியா புத்தகம் பல நூறு ஆண்டுகளுக்கு பின் எழுதப்பட்டது. கர்த்தர் குறிப்பாக உணவு பொருட்களை கொண்டு வர சொன்னார். அது லேவியருக்கும், விதவைகளுக்கும், அனாதைகளுக்கும் கொடுக்கப்பட வேண்டியதாயிருந்தது. தசம பாகம் என்பது மக்களை காப்பாற்ற கொடுக்கப்பட்டது. நீங்கள் சொன்ன வசனத்தில் ‘என் வீட்டில் ஆகாரம் உண்டாயிருக்க’ என்ற வார்த்தைகளை கவனியுங்கள் .

ஆகாரமே தசமபாகமாக கொடுக்க பட்டது. எப்படி நீங்கள் ‘ஆகாரம்’ என்ற வார்த்தையை விட்டு விட்டு, பணம் என்று கூறுகிறீர்கள்?

ஜோன்ஸ்: எனக்கு தெரிய வில்லை.

நீதிபதி: மேலும் இந்த வார்த்தைகள் பழைய ஏற்பாட்டின் கீழ் இருந்த இஸ்ரேல் மக்களுக்காக சொல்லப்பட்டது. அந்த நியாய பிரமாணங்கள், இயேசு கிறிஸ்துவால் நிறைவேற்ற பட்டு விட்டது. அந்த படியான பிரமாணங்கள் பழைய ஏற்பாடு ஆலய ஒழுங்கை பற்றியது. அவைகள் புதிய ஏற்பாட்டில் அவைகள் தேவை இல்லை. தேவனால் அவைகள் ஒழிக்க பட்டு விட்டன.

மீண்டும் நீங்கள் வசனங்களை தவறாக மேற்கோள் காட்டி , உங்கள் பண ஆசையை தீர்த்துக்கொள்ள, மக்களை ஏமாற்றுகிறீர்கள்.

தசம பாகம் என்பது ஆகாரத்தில் இருந்து பணமாக எப்படி மாறியது என்று வேதத்தில் இருந்து ஆதாரம் தர முடியுமா?

ஜோன்ஸ்: எனக்கு அது தெரியாது.

நீதிபதி: அப்படியானால் அதை மாற்றியது யார்?

ஜோன்ஸ்: மனிதர்கள் ….

நீதிபதி: சரி, வேறு ஏதாவது ஆதாரங்கள் உண்டா?

ஜோன்ஸ்: ஆம், புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து சொன்ன வசனம் உண்டு.

நீதிபதி: சொல்லுங்கள்.

ஜோன்ஸ்: மத்தேயு 23:23 இல் , மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டும்.

இங்கே இயேசு தசமபாகம் கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறாரே!!

நீதிபதி: இயேசு யாரிடம் பேசுகிறார்?

ஜோன்ஸ்: பரிசேயர் மற்றும் சதுசேயரிடம். 

நீதிபதி: நீங்கள் பரிசேயனா ? நியாய சாஸ்திரியா?

ஜோன்ஸ்: இல்லை.

நீதிபதி: இயேசு இதே வசனத்தில் நியாய பிரமானத்தில் கற்பித்திருக்கிற இவைகள் என்று சொல்லுகிறார். நாம் நியாய பிரமாணத்திற்கு உட்பட்டவர்களா?

ஜோன்ஸ்; இல்லை

நீதிபதி: ஏன் இல்லை?

ஜோன்ஸ்: இயேசு அதை தன் சரீரத்தில் நிறைவேற்றி விட்டார்.

நீதிபதி: இயேசு அதை எப்போது நிறைவேற்றினார்?

ஜோன்ஸ் : சிலுவை மரணத்தினால்.

நீதிபதி: அப்படியானால் இயேசுவின் மரணம் வரை நியாயப்பிரமாணம் நடைமுறையில் இருந்தது. இல்லையா?

ஜோன்ஸ்: ஆம், இயேசு கிறிஸ்து சிலுவையி அறைய படாததால், நியாய பிரமாணம் பரிசேயர்களால் பின்பற்ற பட வேண்டியதாய் இருந்தது. நியாயப்பிரமாணம் முடிந்தவுடன், தசமபாக முறைகளும் முடிந்து விட்டன.

நீதிபதி: மீண்டும் வசனத்தை வாசியுங்கள். அவர்கள் எதை தசமபாகமாக செலுத்தினார்கள்?

ஜோன்ஸ்: ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும்

நீதிபதி : இங்கே பணம் குறிப்பிட பட்டு இருக்கிறதா?

ஜோன்ஸ் : இல்லை, ஆனால் மக்கள் சபைக்கு உணவு பொருட்கள் கொடுத்தால், சபை எப்படி சமாளிக்க முடியும்? சபையின் தேவைகள் அதிகம்.

நீதிபதி: உங்கள் தேவைகள் நீங்கள் பணத்தை எப்படி பெறுகிறீர்கள் என்ற முறையை நியாயப்படுத்த முடியாது. உங்களுக்கு கடன் இருக்கிறது என்பதால், வேத வசனங்களை சூழ்ச்சியாய் மேற்கோள் காட்டி, சாபம் என்று மக்களை பயமுறுத்தி பணம் வாங்குவதற்கு அதிகாரம் இல்லை.

தசம பாகம் என்பது பணம் இல்லை.

தசமபாகம் என்பது பழைய ஏற்பாட்டின் கீழ் உள்ள சட்டம். புதிய ஏற்பாட்டில் அது ஒத்து வராது.

பழைய ஏற்பாட்டில் தசம பாகம் என்பது மக்களை காப்பாற்றுவதற்காக கொடுக்கப்பட்டது. கட்டிடங்களை அல்ல. நாம் இப்போது புதிய ஏற்பாட்டின் கீழ் இருக்கிறோம். இப்போது நாம் எப்படி கொடுக்க வேண்டும்?

அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார். II கொரிந்தியர் 9:7

எனவே ஒவ்வொரு விசுவாசியும் அவர்களுடைய இதய விருப்பத்தின் படிதான் கொடுக்க வேண்டும். அவர்களை சாபத்தினால் பயமுறுத்தினால், நீ பாவம் செய்கிறாய். நீங்கள் அவர்களை கட்டாயப்படுத்தும் போது, அவர்கள் மனமகிழ்ச்சியாய் கொடுப்பது இல்லை.

ஜோன்ஸ்: நான் தவறாய் மக்களை ஏமாற்றி இருக்கிறேன் என்று உணருகிறேன். நான் சரியாய் வசனத்தை படிக்கவில்லை. நான் குற்றவாளிதான்.

நீதிபதி : கிறிஸ்து இயேசு அநேக இடங்களில் ஏழைகளுக்கு நாம் உதவி செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். பணக்காரனை பார்த்து உண்டான எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்கு கொடு என்று சொன்னாரே… நீங்கள் ஏன் ஏழைகளுக்கு உதவி செய்வதை பற்றி சபையில் பேசுவது இல்லை? சிங்காசனத்தில் முன் நிற்கும் போது

அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.

பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன் என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன் என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்;

வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார். மத்தேயு 25.

இதை மையப்படுத்தி ஜனங்களுக்கு சொல்லாமல் ஏன் உங்கள் சுய நலத்திற்காக தேவன் சொல்லாததை பொய்யாய் சொல்லுகிறீர்கள்? நீங்கள் தேவ வார்த்தையில் ஒன்றையும் கூட்ட கூடாது என்று எழுதியதை வாசித்து இருக்கிறீர்களா?

நான் உங்களுக்குக் கற்பிக்கும் உங்கள் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை நீங்கள் கைக்கொள்ளும்படி, நான் உங்களுக்குக் கற்பிக்கிற வசனத்தோடே நீங்கள் ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம். உபாகமம் 4.

நீங்கள் உங்களுக்கு பணம் வேண்டும் என்பதற்காக பொய்யாய் போதித்து இருக்கிறீர்கள். வசனமே உங்களை நியாயம் தீர்க்கும்.

நீங்கள் இதை அறியாமல் செய்து விட்டீர்கள் என்று ஒத்து கொள்கிறேன். ஆனால் நீங்கள் சத்தியத்தை சரியாய் புரிந்து மக்களுக்கு போதிக்க வேண்டும். பணத்திற்க்காக ஊழியம் செய்ய கூடாது. Court adjourned.

கர்த்தர் உங்களுக்கு காட்டும் ஊழியரை தாங்குங்கள். ஊழியத்தை தேவன் தாங்குவார். தேவனிடத்தில் கேட்காமல் எதையும் உங்கள் மாம்சீகமாக மனுஷரை மகிமைப்படுத்தி விளம்பரம் பண்ணி, ஒருவன் இடறலுக்கு நீங்கள் காரணமாகிவிடாதீர்கள். அதற்கு நீங்கள் தேவனிடத்தில் கணக்கு ஒப்புவிக்கவேண்டும் என்று வேதம் சொல்லுகிறது.

(மொழிபெயர்க்கப்படது)

ஆங்கில பதிப்புக்கு இந்த இணைப்பை பார்க்கவும்

https://spiritualwhip.blogspot.com/2019/03/trial-of-pastor-jones.html

Leave a Reply